வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் 'பாத்துமா வின் ஆடு'. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கு..
நவீன செவ்வியல் ஆக்கங்கள் என்று தி. ஜானகிராமன் சிறுகதைகளை மதிப்பிடலாம். அவை உருவானதும் வெளிப்பட்டதும் சார்புகொண்டதும் செவ்வியல் அடிப்படையிலும் நோக்கிலும்தான். அவரது கதைகள் மானுடச் செய்கைகளை அவற்றின் இயல்புடன் பார்த்தன. சரிதவறு, நல்லது கெட்டது என்ற வரையறைகளை மீறிச் சித்தரித்தன. வாழ்வில் சிக்கல்களைக் க..
பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது. சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர கலைஞனின் லட்சியம் அவனின் ரசனை அவனின் வாழ்க்கை, இசை,கலை மற்றும் பண்பாடு குறித்த பார்வை மிகவும் ஆழமாக Jk பதிவிடும் அதே நேரத்தில் சாரங்க..
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச் சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட..
பாற்கடல்இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது...